இடி,மின்னலின் போது மக்கள் வெளியில் வரவேண்டாம்.. இது கஜா புயல் போல் அல்ல.. அமைச்சர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2020, 2:31 PM IST
Highlights

தாழ்வான பகுதி,  பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வர வேண்டுகோள் விடுத்த  அவர், மக்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்களை தொடர்ந்து வழங்க முதல்வர் தயார் நிலையில் இருக்க  அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை இன்று காலை 9 மணிக்கு சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுபெற்றுள்ளது, இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம். தெரிவித்துள்ளது. தற்போது 740 கி.மீ தொலைவில் உள்ளது, கரை கடக்கும் போது 80 முதல் 100 கி.மீ வரை காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது, 6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோணத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர். 

கனமழை, புயல், காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மீனவர்களு க்கான அறிவுறுத்தலும் தொடர்ந்து மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். ஏரிகளை கண்காணிக்கவும், கால்வாய்கள் அடைப்பில்லை என்பதை உறுதி செய்ய அறிவிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி,  பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வர வேண்டுகோள் விடுத்த அவர், மக்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்களை தொடர்ந்து வழங்க முதல்வர் தயார் நிலையில் இருக்க  அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். 

இடி, மின்னல் சமயத்தில் வெளியே வர வேண்டாம் என்றும், நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், நீர் செல்லும் பாதைகள், கடற்கரை பகுதிகளுக்கு குழந்தைகைகளை அனுமதிக்க கூடாது, பொதுமக்களும் அங்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தினார். மக்கள் அத்தியாவசிய பொருட்களான வலுவன கயிறு, தீப்பெட்டி, மண்ணெண்ணெய்,மெழுகுவர்த்தி, பேட்டரி டார்ச், உலர் பழ வகைகள், பிரட் போன்றவற்றை தற்போதே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்றார்.கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை இந்த புயல் ஏற்படுத்தாது என தகவல் கிடைத்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் சமயத்தில் 100 கி.மீ க்குள் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசு இதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது, மக்கள் இதனை எதிர்கொள் தயாராகவும், பாதுகாகப்பகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது அவருடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

click me!