துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா? கொளுத்தி போடும் அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Nov 23, 2020, 1:46 PM IST
Highlights

என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை, ஜெயலலிதா தான் கொண்டு வந்தார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை, ஜெயலலிதா தான் கொண்டு வந்தார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்த போது, திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும், ஊழல் அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சனங்களை  முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி.ஆர்பாலு பாஜக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளிலும் குடும்ப அரசியல் இருப்பதாகவும், திமுகவை மட்டுமே மிரட்டும் தோனியில் சுட்டிக் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- நிவர் புயலுக்கு யாரும் அச்சபடத் தேவையில்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கஜா புயலைபோல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என சொல்லப்படுகிறது. 

மேலும், அரசியல் இல்லாமல் உலகம், நாடு, மாநிலம், ஏன் யாரும் இல்லை. எனவே அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுக வழிவழியாக வாரிசு அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவில் அதுபோன்று இல்லை.  அதிமுகவில் கொடி பிடித்தவர் கூட முதல்வராக முடியும், திமுகவில் முடியுமா? துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? உதயநிதியை அறிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்கமாட்டார் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

click me!