கொரோனா தடுப்பு மருந்து குறித்து கவலைபடாமல், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- ராதாகிருஷ்ணன்.

Published : Apr 15, 2021, 11:58 AM ISTUpdated : Apr 15, 2021, 11:59 AM IST
கொரோனா தடுப்பு மருந்து குறித்து கவலைபடாமல், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- ராதாகிருஷ்ணன்.

சுருக்கம்

கொரோனா தடுப்பு மருந்து குறித்து மக்கள் கவலைபடமால், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு மருந்து குறித்து மக்கள் கவலைபடமால், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நேற்று இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 7819 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. இதில் 1.15 என இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு லட்சமாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் தடுப்பூசி திருவிழா தொடங்கி உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்.  பொதுமக்கள் சரியான முறையில் தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்காக சென்னை கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் கொரோனா எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விண்ணப்பம் ஆங்கிலம் இருப்பதை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும். 

தற்போது மழைக் காலம் என்பதால் மின்சாரம் ஜெனரேட்டர் ஆக்சிஜன் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்து கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோன மருந்து மட்டுமல்லாமல் குறைந்தது 3 மாததிற்கான 120 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் கையிருப்பில் உள்ளது. மக்கள் மருந்து குறித்து கவலைபடமால், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா இது ஒரு இயற்கை பேரிடர்,  முககவசம் மூலமே இந்த தொற்றின் தொடர் சங்கிலியை உடைக்க முடியும் என்றார். 


 

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?