மக்களே ஊரடங்கு குறித்து பதற்றம் வேண்டாம்.. அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்த தடையும் இல்லை.. தகவல் இதோ.

By Ezhilarasan BabuFirst Published May 8, 2021, 9:49 AM IST
Highlights


தேனீர் கடைகள் பகல் 12:00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும், உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.  

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் 10-5-2021 காலை 4 மணி முதல் 25 -5- 2021 அன்று காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,  முழு ஊரடங்கும் போது பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர் தொடர்ந்து கண்காணிக்க இப்பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும். 

.3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க 26-4-2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது, இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட மாட்டாது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். 

தேனீர் கடைகள் பகல் 12:00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும், உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளில் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள். முடிதிருத்தம் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி அங்காடிகளில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை தொடர்கிறது. அத்தியாவசிய துறைகளான தலைமைச்செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் சேவை துறை அலுவலகங்கள் தவிர மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை முன்னிட்டு பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 8 மற்றும் 9 (சனி, ஞாயிறு )ஆகிய இரு தினங்களில் அனைத்து கடைகளும்,  நிறுவனங்களும் வழக்கம்போல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கைகளை அடிக்கடி சோப்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, கூட்டங்களை தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

click me!