தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு .. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

Published : May 08, 2021, 09:26 AM ISTUpdated : May 08, 2021, 09:51 AM IST
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு .. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

சுருக்கம்

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடைதொலைத் தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் வருகிற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  அதில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொலைத் தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியத் துறைகளைத் தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இன்றும், நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு உள்ளதால், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும். நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி- பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். 

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் இயங்க அனுமதி இல்லை.நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம், அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. தொலைத் தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!