மக்கள் அதிமுகவை விட, திமுக மீது தான் கடும் கோபத்தில் இருக்கின்றனர் – செயல்தலைவரே சொல்லிட்டாரு…

Asianet News Tamil  
Published : Oct 02, 2017, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
மக்கள் அதிமுகவை விட, திமுக மீது தான் கடும் கோபத்தில் இருக்கின்றனர் – செயல்தலைவரே சொல்லிட்டாரு…

சுருக்கம்

People are in anger at the DMK - the actress told me ...

நீலகிரி

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறவர்கள் மீது இருக்கும் கோபத்தைவிட இன்னும் இந்த ஆட்சியை கலைக்காமல், கவிழ்க்காமல் உள்ளீர்களே என்று திமுக மீதுதான் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி ஏ.டி.சி. திடலில் திமுக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியில் செய்யப்பட்ட வீரவாள் மற்றும் வெற்றிக் கோப்பை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியது: “நாம் சுயமரியாதை உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்க, ஒட்டுமொத்த தமிழர்களும் பாதுகாப்பாக இருக்க பாடுபடும் இயக்கம் திமுக தான்.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்துக் கொண்டிருக்கும் ஆட்சி மீது மக்கள் அளவு கடந்த கோபத்தில் இருக்கின்றனர்.

ஆட்சியில் இருக்கிறவர்கள் மீது இருக்கும் கோபத்தைவிட எங்கள் மீதுதான் கோபத்தில் உள்ளனர். இன்னும் இந்த ஆட்சியை கலைக்காமல், கவிழ்க்காமல் உள்ளீர்களே என்பது தான் அந்த கோபம். தமிழக மக்கள் கொதிப்பாகவும், கொந்தளிப்பாகவும் உள்ளனர்.

பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் உங்களிடம் இருந்துச் சென்றுவிட்டனர். உங்களை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், இந்த ஆட்சி பெரும்பான்மை ஆட்சி என்று நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டு, சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள். இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முடியுமா? இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஏற்கனவே குட்காவை சட்டமன்றத்தில் நாங்கள் காட்டினோம் என்பதற்காக என்னையும், சேர்த்து 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டீர்கள். நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றோம்.

மக்களே நீங்கள் கோபத்தில் இருக்கிறீர்கள். நான் எங்குச் சென்றாலும் இந்த ஆட்சியை எப்போது முடிக்கப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறீர்கள்.

திமுக கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைக் கைப்பற்றாது. ஆனால் பாரதீய ஜனதாவின் அடிமை ஆட்சியை தூக்கி எறிவதற்கு, அது தடை என்று நான் கருதவில்லை.

நாம் தமிழ்நாட்டை முதலில் காப்பாற்ற வேண்டும். சட்டமன்றத்தை ஆளுநர் கூட்டாத காரணத்தினால், உயர்நீதிமன்றத்தை நாம் அணுகி இருக்கிறோம். வருகிற 4–ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. 4–ஆம் தேதியை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் பொறுங்கள்.

தமிழ்நாட்டு மக்களே மகிழ்ச்சி அடையக்கூடிய நல்ல தீர்ப்பு வர காத்திருக்கிறது. அந்த தீர்ப்பின் மூலமாக தமிழகம் மகிழ்ச்சி அடையும். அதற்கு காத்திருங்கள். தயாராக இருங்கள்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!
நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!