விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ஓய்வூதியம் ! சூப்பர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் !

By Selvanayagam PFirst Published Sep 12, 2019, 8:07 AM IST
Highlights

60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் சூப்பர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 30 ஆயிரம் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
 

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில்  60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

பிரதமர் மோடியும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றபோது விவசாயிகளிடம் இது குறித்து உறுதி அளித்தார். இந்நிலையில் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. 

இதற்கு பிரதமரின் விவசாய ஓய்வூதியம் திட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது. திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் 55 முதல் 200 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் 60 வயதை கடந்ததும் ஓய்வூதியம் வழங்கப்படும். 

இத்திட்டத்தில் பயன்பெற தமிழகத்தை சேர்ந்த 30 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 10.15 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


இத்திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் வழங்க உள்ளார். 

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க வேளாண்துறை அதிகாரிகளுக்கு முதலமச்சர்  பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

click me!