உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பாமக

By Velmurugan sFirst Published Dec 16, 2022, 9:17 PM IST
Highlights

இளைஞர் நலன் மற்றும் வியைாட்டுத்துறைக்கு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாமக சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போது நல்ல மழைப் பொழிவு பதிவானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பெய்த மழை நீரை சேமிக்க வழியில்லாமல் வீணாக கடலில் கலப்பது வருத்தம் அளிக்கிறது.

மாடர்ன் உடை அணிந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலையால் எந்த அளவிற்கு மழைப் பொழிவு உள்ளதோ, அதே அளவிற்கு வெயிலின் தாக்கமும் எதிர்காலத்தில் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழல் ஏற்படும் பட்சத்தில் நாம் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும். இதுபோன்ற சூழலை தவிர்க்க முறையான நீர் சேமிப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். 

காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்தின் உரிமையை தட்டிப்பறிக்க முயற்சிக்கிறது. காவிரியில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்பணை என்ற விகிதத்தில் தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டும். பாலாறு, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

ஏலம் விடப்பட்ட மதுவந்தியின் வீட்டில் ரூ.30 லட்சம் பொருள் திருட்டு

நிர்வாகக் காரணங்களுக்காக மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் மாவட்டங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றார். மேலும் அவர் பேசுகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாமக சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

click me!