நாட்டிலேயே சிறந்த விளையாட்டு நகரமாக தமிழகத்தை உதயநிதி மாற்றுவார்..! பொன்முடி நம்பிக்கை

By Ajmal KhanFirst Published Dec 16, 2022, 4:09 PM IST
Highlights

 உலக அளவிலான சதுரங்க போட்டிகளை தமிழக அரசு எவ்வாறு சிறப்பாக நடத்தியதோ அதுபோல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை விளையாட்டில் சிறந்த நகரமாக மாற்ற உதயநிதி செயல்படுவார் என அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய பொறியியல் கல்லூரிகள் மற்றும் இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கல்வி சார்ந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  1963 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் படித்ததாகவும் அப்போது வெறும் 6 பொறியியல் கல்லூரிகள் தான் இருந்த்தாக தெரிவித்தார். தற்போது 504 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளதால் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் தான் பொறியியல் படிக்கிறார்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார். முதலில் 3 பிரிவுகள் மட்டுமே பொறியியல் துறையில் இருந்தது தற்போது 150 துறை உள்ளது என்றும் தற்போது உள்ள கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழக பாட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் எனக் கூறினார்.

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்தா..? அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு

இந்தியாவிலேயே ஆங்கிலம் சிறப்பாக பேசும் மாநிலம் தமிழகம் தான்  என்றும் அதற்கு காரணம் தமிழகம் கடை பிடித்துள்ள இரு மொழி கொள்கை தான் என தெரிவித்தார்.  கல்லூரிகளில் எல்லாம் மாநில மொழிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் மற்ற மொழிகளை தெரிந்து கொள்வதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் முன்பெல்லாம் இடம் கிடைக்க சிரமமாக இருந்ததாகவும், தற்போது கல்லூரிகள் அதிகரித்திருப்பதால் மாணவர்கள் செய்ய குறைவாக சேர்வது போன்று தெரிவதாக கூறினார்.  

விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு ஆர்வம் வந்தால் தான் வளரும்போது அந்த ஆர்வம் இருக்கும் என்ற அடிப்படையில் தான் இந்த பொறுப்பை அவருக்கு முதலமைச்சர் அளித்துள்ளார்.எப்படி உலக அளவில் இருந்த சதுரங்க போட்டிகளை நடத்த விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டாரோ அதுபோல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை விளையாட்டில் சிறந்த நகரமாக மாற்ற உதயநிதி செயல்படுவார் என கூறினார்.

இதையும் படியுங்கள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப பிரச்சனையா.? - மா. சுப்பிரமணியன் விளக்கம்

click me!