மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப பிரச்சனையா.? - மா. சுப்பிரமணியன் விளக்கம்

By Ajmal KhanFirst Published Dec 16, 2022, 2:21 PM IST
Highlights

நீட் தேர்வு விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. தொடர்ச்சியாக துறை சார்ந்த  விளக்கமும் மத்திய அரசிற்கு அளித்து வருகிறோம். எனவே நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதியோர்களுக்கான மருத்துவமனை

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்தவமனை 87.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்தியாவிலேயே முதியோர்களுக்கான பிரத்தியேக முதல் மருத்துவமனையாகும். இதில் மருத்துவ  உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செயப்பட்டு வருகிறது. ஒரு சில நாட்களில் தயார் நிலைக்கு வர இருப்பதாகவும், விரைவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைப்பார் என கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வருகிற மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்த கட்டிடம் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப பிரச்சனை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.இது குறித்த அவரிடம் நேரில் சந்தித்து விளக்கம் கூறப்படும். மேலும் தற்போது சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில் எப்படி தொழில்நுட்ப பிரச்சனை வரும் என கேள்வி எழுப்பினார்.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூடுகிறது தமிழக சட்டசபை..! ஓபிஎஸ், உதயநிதிக்கு எந்த வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.?

நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்குமா.?

மருத்துவ காப்பீடு பணத்தை பெற்று அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படவில்லை எனவும் அரசு சார்பிலே தனியாக நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் தனியார் மருத்துவமனைகள் இதுகுறித்து தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டினார். நீட் தேர்வு விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகவும், தொடர்ச்சியாக துறை சார்ந்த  விளக்கத்தை மத்திய அரசிக்கு அளித்து வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்தா..? அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு
 

click me!