பெற்றோர்களே உஷார்.. குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா.? அது கொரோனாவாக இருக்கலாம்.! பகீர் கிளப்பும் ஆய்வு.

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2022, 3:48 PM IST
Highlights

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகமும் ஃபீஃப்த்  சென்ஸ் என்ற தொண்டு நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர், இதில் கொரோனா வைரஸால் ஏற்படும் பரோஸ்மியா பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள்  விளக்கியுள்ளனர்.

குழந்தைகள் சாப்பிட அல்லது குடிக்க தயங்குகிறார்கள் என்றால் அது கொரோனாவின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பரோஸ்மியாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது, அதாவது உணவு பொருட்களில் இருந்து துர்நாற்றம் போன்றவற்றை அவர்கள் உணரக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலை அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது. மூன்றாவது அலையை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வைரஸ் தொற்று  ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஐசியு வில் ஆனுமதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் தொடர்பான அடுத்தடுத்து ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. 

அதாவது சுவை மற்றும் வாசனை இழப்பு போன்றவை பெரியவர்களுக்கு கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், தற்போது குழந்தைகள் சாப்பிட தயங்கினால் அது கொரோனா தொற்றின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம் என பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளான பிறகு உணவு சாப்பிட மற்றும் குடிக்க குழந்தைகள் எரிச்சல் அடைகின்றனர் என்றால் அது கொரோனா தொற்றுக்கு பிந்தைய அறிகுறியாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

குழந்தைகள் அழுகிய முட்டை வாசனையை உணரக்கூடும்... 

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகமும் ஃபீஃப்த்  சென்ஸ் என்ற தொண்டு நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர், இதில் கொரோனா வைரஸால் ஏற்படும் பரோஸ்மியா பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள்  விளக்கியுள்ளனர். பரோஸ்மியா என்பது உணவு பொருட்களில் இருந்து துர்நாற்றம்  மற்றும் அழுகிய வாசனை உணரக்கூடிய ஒரு நிலை, அழுகிய முட்டை, அழுகிய மீன், அழுகிய இறைச்சி மற்றும்  ரசாயன வாசனை போன்றவற்றை உணரக்கூடிய நிலை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளர். கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்த பின்னரும் கூட இந்த பாதிப்புகள் பலருக்கு தொடர்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு பிறகு பரோஸ்மியா கோளாறு ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு குழந்தைகள் சாப்பிடவும் குடிக்காமலும் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் கூறுகின்றனர். 

டீன் ஏஜ் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்...

பல்கலைக்கழக பேராசிரியர் பில்பார்ட் தனது வாழ்க்கையில் முதல்முறையாக டீனேஜ் குழந்தைகளின் பரோஸ்மியா பாதிப்பை பார்ப்பதாக கூறியுள்ளார். சில மருத்துவ துறையில் உள்ள வல்லுனர்கள் இந்த சிக்கலை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும், இது தெரியாமல் குழந்தைகள் உணவை பற்றி கவலைப் படுகிறார்கள் என்றும், ஏற்கனவே சரியாக சாப்பிடாத அல்லது ஆட்டிசம் கோளாறு உள்ள குழந்தைகள் இந்த பிந்தைய கோவிட் அறிகுறியை கடந்து செல்வது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

5th sence தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டங்கன்போக்  கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு குழந்தைகளை உணவு மற்றும் பானங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் அதற்கு காரணம் புரோஸ் மியாதான், ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுவதாக நினைத்துக் கொள்கின்றனர். இதனால் குழந்தைகளின் உடல் எடை குறைகிறது, ஆனால் மருத்துவர்கள் அதை குழந்தைகளுக்குள்ள கெட்ட பழக்கம் என நினைத்துக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேச்சர் ஜெனிடிக்ஸ் இதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குழந்தைகளுக்கு பரோஸ்மியா கோளாறுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆய்வில் கொரோனாவால் ஏற்படும் பிரச்சனைகளே இதற்கு காரணம் என்றும் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களில் பரோஸ்மியா அதிகமாக காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

பரோஸ்மியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவு அளிக்க வேண்டும்...

பெற்றோர்கள் குழந்தைகளுக்கான உணவு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறார், இதில் தங்கள் குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கும், எது பிடிக்காது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும், இது தவிர கடுமையான வாசனை உள்ள உணவுகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும். வாசனையற்ற உணவை உண்ண அவர்களை ஊக்குவிக்க வேண்டும், இதன்மூலம் வாசனை மற்றும் சுவை பிரச்சினை அவர்களை அதிகம் தொந்தரவு செய்யாது. அதன் மூலம் அவர்கள் உணவை எளிதாக சாப்பிட முடியும். சாப்பிடும் போது குழந்தையின் மூக்கை மூடுவதற்கு மூக்கு கிளிப்பையும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார். பரோஸ்மியாவில் இருந்து விரைவாக குணமடைய குழந்தைகளுக்கு வாசனை பயிற்சி கொடுக்கலாம், இதில் குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை நான்கு விதமான வாசனைகளை மணக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!