பன்னீரின் பேஸ்மெண்டை ஆடவைத்த சரவணன் : வீடியோ விவகாரத்தில் எடப்பாடியிடம் சரண்டராகும் ஓபிஎஸ்!!

First Published Jun 17, 2017, 10:15 AM IST
Highlights
panneerselvam afraid of MLA for SALE video


கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ. சரவணன்  “தப்பி வந்த” காட்சி இன்னமும் எல்லோர் மனதிலும் நிழலாடும். ஒரு பெர்முடாஸ், டி ஷர்ட் சகிதமாக ஏதோ பிக்னிக் செல்லும் சாஃப்ட்வேர் எம்ப்ளாயி போல் சீன் போட்டபடி வெளியேறி மீடியாவின் சூடேற்றினார். பரபரப்பை பற்ற வைத்த சரவணன் நேராக தங்கள் அணியில் வந்து இணைந்தபோது பன்னீர் அணி கோக்குமாக்காக அவரை கொண்டாடியது. 

சரோ, சரோ என்று சரவணன் எம்.எல்.ஏ.வை தூக்கி வைத்த பன்னீர் அண்ட்கோ, டைம்ஸ் நவ் மற்றும் மூன் டி.வி. இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ வெளியான பின் விசிறி எறிந்திருக்கிறது. 

காரணம்?...அந்த வீடியோ விவகாரத்தில் சரவணன் சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டிருக்கும் தகவல்கள் பன்னீர் அணியை பயங்கரமாய் பஞ்சர் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். எடிட் ஆகாத வீடியோவை மிக முழுமையாக பார்த்தவர்கள், இந்த வீடியோ அப்படியே வெளியே வந்தால் அதிகம் காயப்படப்போவது பன்னீரின் அணிதான் என்கிறார்கள். 
அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கிறது? என்று பேசுபவர்கள்...

ஓ.பி.எஸ். அணி குறித்து கமெண்ட் அடிக்கும் சரவணன், ‘அம்மாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் கூட்டணி அது.’ என்று சொல்லியிருக்கிறாராம். அதாவது அம்மாவின் நம்பிக்கையை இழந்த பன்னீர், முனுசாமி, நத்தம், போன்றோர் சேர்ந்து அந்த அணியை அமைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதுபோக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் என்பது எட்டுப்பத்து நாட்களுக்கு முன்பே பன்னீர் அணிக்கு தெரியும் என்றும் சொல்லியிருக்கிறார். தேர்தல் ரத்தாகும் என்று தெரிந்தே மக்களிடம் வெற்று பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றிய கூட்டம் அது என்பது போல் பன்னீர் அணியை இது சித்தரிக்கிறது.

இந்த பாயிண்டில் பன்னீர் வெறுத்தேவிட்டாராம். அதேபோல் பன்னீர் அணி அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்காக இருக்க மிக முக்கிய காரணம், ‘அம்மா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும்.’ என்கிற கோரிக்கைதான்.

ஆனால் இதையே கேலிப்பொருளாக்கி விட்டிருக்கிறதாம் சரவணனின் வீடியோ. அதாவது அம்மாவின் மரணத்தில் மர்மம் ஏதுமில்லை, அதை வைத்து அரசியல்தான் நடந்துகிட்டிருக்குது என்கிற ரேஞ்சில் அவர் பேசியிருக்கிறாராம். இது பன்னீரை பதறவிட்டிருக்கிறது என்கிறார்கள். எதை வைத்து இந்த அணி கட்டி எழுப்பப்பட்டிருக்கிறதோ அதன் அடிமட்டத்தையே அசைத்துவிட்டது சரவணின் பேச்சு என்று கொதித்துக் கிடக்கிறதாம் பன்னீர் அணி.

அதேபோல் கூவத்தூரிலிருந்து கிளம்பிய சரவணன் மீடியாவை பார்க்கும் முன் நத்தத்திடம் ’உங்க அணியில ஜாயிண்ட் பண்ணிக்கிறேண்ணே!’ என்று பேசினாராம். அப்போது வர்றதுக்கு முன்னாடி பிரஸ்காரங்களை பார்த்து பேசி கூவத்தூர்ல நடக்குற விஷயங்களை சொல்லி கிழிச்சுட்டு வா, சாதாரணமா பேசாம எக்ஸ்ட்ரா நாலு பிட்டு சேர்த்துப் போடுன்னு சொன்னதாகவும் சரவணனின் பேச்சில் கேலியும், கிண்டலுமாக வெளியாகி இருக்கிறதாம். 

ஆனால் எம்.எல்.ஏ. சரவணன் இவை அனைத்தையும் அடியோடு மறுத்து பன்னீர்செல்வத்திடம் புலம்பி இருக்கிறாராம். ‘வீடியோவில் இருக்குறது நாந்தான். ஆனா இப்படியெல்லாம் பேசலண்ணே. திட்டம்போட்டு பெருசா டிரிக் பண்ணி இப்படி செஞ்சிருக்காங்க. வாய்ஸு அத்தனையும் போலி.’ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறாராம். 

வாய்ஸ் உண்மையோ அல்லது பொய்யோ என்பது வேறு விவகாரம். ஆனால் வீடியோ விவகாரத்தின் முழு முகத்தையும் நொடிக்கு நொடி ஓடவிட்டு பக்காவாக உள்வாங்கியிருக்கும் எடப்பாடி அணி, இந்த வீடியோவால் தங்களுக்கு பெரிய பிரச்னை இல்லை. ஆனால்  முழுக்க முழுக்க பன்னீர் கோஷ்டிக்குதான் டேமேஜ் என்பதை புரிந்து வைத்திருக்கிறது.

ஆக இதை ஒரு டிரம்ப் கார்டாக பயன்படுத்தி பன்னீர் அணியை வளைக்கிறது. எதிர்கட்சிகள் இதை பற்றி விவாதம் நடத்தாம நாங்க தடுக்கிறோம், பரிகாரமா நீங்க எங்களை இப்போதைக்கு சைலண்டா சப்போர்ட் பண்ணுங்க, கூடிய சீக்கிரம் வெளிப்படையா பார்த்துக்கலாம் என்று நிபந்தனையை தட்டியிருக்கிறார்களாம். 

அந்த வகையில் இந்த பண பேர விவகாரம் குறித்து எதிர்கட்சிகளை பேசவிடாமல் சட்டமன்றத்தில் முடக்கும் எடப்பாடி அணியின் செயலானது பன்னீர் அணிக்கே சாதகம் என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம் எடப்பாடியிடம் பணியும் பன்னீர் அணி, பெரிய நிபந்தனையில்லாமல் மெதுவாக எடப்பாடி அணியுடன் வெளிப்படையாக கைகோர்க்கும் நாள் விரைவில் நடக்கலாம் என்றும் கணிக்கிறார்கள்.  
இதுதான்டா அரசியல்!

click me!