
டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பிஸினெஸ்மேன்கள் ஏன் உடன் பிறவா சகோதரி கூட அரசியலுக்கு வரலாம் ஆனால் ரஜினிநாந்த் அரசியலுக்கு வரக் கூடாதா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி, நடிகர், நடிகைகளை ஏன் ஒதுக்கி வைத்து பார்க்கிறீர்கள் ? அவர்களும் மனிதர்கள் தானே ? அவர்கள் அரசியலுக்கு வருவதை மட்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் ? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பொதுவாக அனைவருமே அரசியலில் தான் உள்ளனர் என்றும் இதற்கு அளவுகோல் என எதையும் நிர்ணயிக்க முடியாக உன தெரிவித்தார்.
டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பிஸினெஸ்மேன்கள் ஏன் உடன் பிறவா சகோதரி கூட அரசியலுக்கு வரலாம் ஆனால் ரஜினிநாந்த் அரசியலுக்கு வரக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே சட்டப் பேரவையில் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து அது சர்ச்சையாகி, பின்னர் அதற்காக கஸ்தூரி மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.