சசிகலா விவகாரத்தில் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த பன்னீர்.. கட்சியில் சேர்ப்பது குறித்து வெளியிட்ட அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2021, 2:08 PM IST
Highlights

இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து, திருநெல்வேலி, இராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சசிகலா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். 

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவின் சசிகலாவுக்கு இடமில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்து எடப்பாடியின் கருத்துக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறையிலிருந்து வெளி வந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அவர் திடீரென அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் கட்சி வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முழங்கிய சசிகலா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாக அறிவித்துள்ளார். அதேபோல் அதிமுக பொன் விழாவி தினத்தில் சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்ததுடன், அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். சசிகலாவின் இந்த நடவடிக்கை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படியுங்கள் : சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்தான்.. ஒருங்கிணைப்பாளரை ஓங்கி அடித்த ஜெயக்குமார்.

பின்னர் அது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்துவிட்டால் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடுவாரா? அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, முதலில் அவர் அதிமுகவிலேயே இல்லை என கடுமையாக விமர்சித்தார். அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா குறித்து பேசுகையில், மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் அதிமுகவில் இல்லை, அவர் செய்வதை பேசுவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து, திருநெல்வேலி, இராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சசிகலா திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வதை மக்கள் முடிவு செய்வார்கள், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனக் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார்ஆகியோர் கூறி வந்த நிலையில், தற்போது ஓ பன்னீர்செல்வவத்தின் இக்கருத்து நேரெதிராக அமைந்துள்ளது. ஏற்கனவே சசிகலா ஒற்றுமையுடன் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

 

click me!