தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளைத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளைத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமூக சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்திலிருந்து நாம் வந்துள்ளோம்.
இதையும் படிங்க: 2024 தேர்தலில் இவர்கள் மட்டும் ஜெயிக்கக்கூடாது.. “மகாபாரதம்” மூலம் பாஜகவை தாக்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்.!
திமுக பொருளாதார, வேலைவாய்ப்பை உருவாக்க முக்கியத்துவம் அளிப்பது போலப் பீகாரில் நாங்களும் இதையே முன்னெடுத்துச் செல்கிறோம். தற்போது நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு துணை நின்றவர் மு.க.ஸ்டாலின்... அகிலேஷ் யாதவ் புகழாரம்!!
சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சமூக நீதிக் கொள்கைகள் கட்சிகள் சந்திக்கும் நாளாக இன்று அமைந்துள்ளது. சோசலிசம் மற்றும் சமூக நீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளைத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.