ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு அதரவு தெரிவித்து துணை நின்றவர் மு.க.ஸ்டாலின் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு அதரவு தெரிவித்து துணை நின்றவர் மு.க.ஸ்டாலின் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நீங்கள் ஏன் இந்திய பிரதமர் ஆக கூடாது..? முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வர சொன்ன ஃபரூக் அப்துல்லா
இதில் பங்கேற்று பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் அணியை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1976 இல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் ஸ்டாலின். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தலிலும் திமுக-காங். கூட்டணி தொடரும்... மல்லிகார்ஜுனே கார்கே திட்டவட்டம்!!
பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு அதரவு தெரிவித்து துணை நின்றவர் மு.க.ஸ்டாலின். கலைஞரைப் போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதவாதத்தை எதிர்த்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாத்திகவாதி. ஆனால் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.