எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அதற்க்கு போட்டியாக வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார். இதற்க்கான முக்கிய நிர்வாகிகளோடு ஓபிஎஸ் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தொண்டர்களை சந்திக்கும் இபிஎஸ்
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் பழனி, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார். அப்போது திமுக அரசை விமர்சித்து பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஒரு வாரமாக தனது சொந்த மாவட்டமான தேனியில் தங்கிருந்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நேற்று மாலை சென்னை திரும்பிய ஓபிஎஸ், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளோடு இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வட மாவட்டங்களில் ஓபிஎஸ் சுற்றுபயணம் செய்வது தொடர்பாகவும் அடுத்த கட்ட திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
ஒலிம்பியாட் செஸ் போட்டி நிறைவு விழா..! தோனி பங்கேற்கவில்லை.. காரணம் என்ன தெரியுமா.?