இரட்டை இலையை முடக்கி! ரஜினியை முன்னிறுத்தி பாஜக தலைமையிலான கூட்டணி.. பகீர் கிளப்பும் முன்னாள் எம்.பி..!

By vinoth kumarFirst Published Aug 9, 2022, 9:49 AM IST
Highlights

அதிமுக சின்னத்தை முடக்கி ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பாஜக? என முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக சின்னத்தை முடக்கி ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பாஜக? என முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழுவிலேயே சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆததரவாளர்கள் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ தன்னை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லையென கூறியது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை நீக்கியுள்ளார். இதனையடுத்து புதிய மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்தும் வருகிறார்.

இதையும் படிங்க;- ஆளுநரா? நியமன எம்பியா? ஆர்.என்.ரவியோடு ரஜினிகாந்த் சந்தித்ததில் பின்னனி என்ன..?

மேலும் இரட்டை இலையை முடக்கவே பாஜக இவர்கள் இருவரையும் ஆட்டுவிப்பதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சிதறுண்ட அதிமுக ஒன்று சேர வேண்டும் என கூறிவருகின்றனர். இதுபோன்று அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக ஆளுநர் ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக ரஜினியே கூறியுள்ளார். இந்நிலையில்,  சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க ? என கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சுயநலத்தால் யின் சூழ்ச்சிக்கு அதிமுகவை பழிகொடுத்த & வரும் நாடாளுமன்ற தேர்தலில் வை உடைத்து சின்னத்தை முடக்கி, ரஜினி யை முன்னிறுத்தி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைத்து அதில் சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க ?

— K C Palanisamy (@KCPalanisamy1)

 

 

இதுதகுறித்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சுயநலத்தால் பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுகவை பழிகொடுத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை உடைத்து சின்னத்தை முடக்கி, ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைத்து அதில் சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க ? என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்கையில் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஒருவேளை ரஜினி பாஜக ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  சசிகலா,தினகரனுடன் இணைந்து செயல்படுமாறு கூறினாரா ஓபிஎஸ்..? திடீர் விளக்கம் அளித்த தேனி மாவட்ட செயலாளர்

click me!