எதிர்க்கட்சிகள் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க.. போட்டு தாக்கும் நாராயணன் திருப்பதி..!

By vinoth kumarFirst Published Aug 9, 2022, 7:21 AM IST
Highlights

 மின் துறையில் நிலவும் மின் திருட்டு, ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மோசமான நிர்வாகம், தரமற்ற மின்சாரம் ஆகியவை அகற்றப்பட்டு  கடும் கடனில் சிக்கி தவிக்கும் மின் பகிர்மான நிறுவனங்கள் லாப மீட்டும் பாதையில் செல்லும். 

லஞ்சம், ஊழல், முறைகேடுகள், மின் திருட்டு இவைகளை தடுக்கும் மின்சார மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று மக்களவையில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிமுகம் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது என்று வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- Electricity Amendment Bill 2022: மின்சார சட்டத்திருத்த மசோதவை ஏன் 27 லட்சம் பொறியாளர்கள் எதிர்க்கிறார்கள்?

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- மின்சார மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் 'கம்பி கட்டும் கதை' களையெல்லாம் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா சட்டமானால் மின்துறையில் மிக பெரிய சீர்திருத்தம் அரங்கேறும். மின் துறையில் நிலவும் மின் திருட்டு, ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மோசமான நிர்வாகம், தரமற்ற மின்சாரம் ஆகியவை அகற்றப்பட்டு  கடும் கடனில் சிக்கி தவிக்கும் மின் பகிர்மான நிறுவனங்கள் லாப மீட்டும் பாதையில் செல்லும். 

இதையும் படிங்க;- மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க பாஜக அரசு முயற்சி… அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!!

மானியங்கள் ரத்தாகும், சலுகைகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதெல்லாம் கட்டுக்கதை. தனியார் முதலீடுகள் மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள் அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி நிலவும். அதன் மூலம் சீரான சேவை மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும்.

மின்சார மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் 'கம்பி கட்டும் கதை' களையெல்லாம் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா சட்டமானால் மின்துறையில் மிக பெரிய சீர்திருத்தம் அரங்கேறும். மின் துறையில் நிலவும் மின் திருட்டு, ஊழல், லஞ்சம், முறைகேடுகள்,மோசமான நிர்வாகம், தரமற்ற மின்சாரம்(1/3)

— Narayanan Thirupathy (@Narayanan3)

 

 

சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட இதர மாற்று எரிசக்தி திட்டங்கள் வலுப்பெறும். லஞ்சம், ஊழல், முறைகேடுகள், மின் திருட்டு இவைகளை தடுக்கும் மின்சார மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!