மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க பாஜக அரசு முயற்சி… அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Aug 8, 2022, 11:15 PM IST
Highlights

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். இந்த சட்டத்திருத்த மசோதா ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டிஆர் பாலு கடுமையாக  எதிர்த்து திமுகவின் எதிர்ப்பு குரலை பதிவு செய்தார். தனியார் துறைகள் அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்வார்கள். 1.59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது.

இதையும் படிங்க: இலங்கையை போல தமிழகத்திலும் மக்கள் புரட்சி வெடிக்கும்... எடப்பாடி பழனிசாமி அதிரடி!!

விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம்,100 யூனிட் இலவச மின்சாரம், விசை திரி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம் எல்லாம் இந்த மசோதாவால் பாதிப்பு ஏற்படும். மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுக தான்.

இதையும் படிங்க: அவங்க எடப்பாடியின் கொத்தடிமைகள்.. உன்மையான அதிமுக நாங்க - இபிஎஸ் தரப்பை அலறவிட்ட ஓபிஎஸ் குரூப்

நிச்சயம் மின்சாரத்துறையை தனியார் மையமாக்கும் ஒரு முயற்சி தான் இந்த மசோதா. முழுமையான எதிர்ப்பு குரலை திமுக தொடர்ந்து இந்த சட்ட மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவது தொடர்பாக எந்த சரத்தும் மசோதாவில் இடம் பெறவில்லை. சொந்த காசில் ஒருவர் கார் வாங்கினால் டீசல் அடித்து காரை இன்னொருவர் ஓட்டி செல்கிறேன் என்ற சொல்லுவது போல் இருக்கிறது இந்த சட்டம். இது நம்ம கட்டமைப்பு அதனை சிதைக்கும் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது என்று தெரிவித்தார். 

click me!