இலங்கையை போல தமிழகத்திலும் மக்கள் புரட்சி வெடிக்கும்... எடப்பாடி பழனிசாமி அதிரடி!!

By Narendran S  |  First Published Aug 8, 2022, 9:22 PM IST

இலங்கை அதிபரை போல இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பியோடும் நிலைமை திமுகவுக்கும் வரும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இலங்கை அதிபரை போல இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பியோடும் நிலைமை திமுகவுக்கும் வரும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சி மக்களுக்கு பயந்து இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலைமை, தமிழ்நாட்டில் திமுகவுக்கும் வரும். அதே மக்கள் புரட்சி தமிழகத்திலும் வெடிக்கும். காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ அது போல அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதையும் படிங்க: “அடுத்து பேருந்து கட்டணம் உயரும்..திறமையற்ற ஆட்சி, மக்கள் பாவம்”- ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி !

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் எங்களது ஆட்சியில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது கரண்ட் எப்ப வரும் எப்ப போகும் என்று மக்களால் சொல்ல முடியவில்லை. வீட்டு வரி 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், 2000 ரூபாயாக இருந்த வீட்டு வரி 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவங்க எடப்பாடியின் கொத்தடிமைகள்.. உன்மையான அதிமுக நாங்க - இபிஎஸ் தரப்பை அலறவிட்ட ஓபிஎஸ் குரூப்

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதையும் பெண்களும் நம்பி ஓட்டு போட்டு இன்று அந்த பணம் என்னானது என கேள்வி கேட்கும்போது அந்தப் பணம் உரிமை பணம், ஊக்கப்பணம், கொடுப்பதற்கு ஆய்வு செய்து வருகிறோம் என பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி தருகிறேன் என கூறி பொய்யான வாக்குறுதியில் அளித்து மு.க.ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார் என்று தெரிவித்தார். 

click me!