அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? ரஜினியிடம் அரசியலை பேச வேண்டிய அவசியம் என்ன..? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

By Ajmal Khan  |  First Published Aug 9, 2022, 10:38 AM IST

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.


ஆளுநர்- ரஜினி சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். ஆளுநரோடு திடீர் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழக ஆளுநருடன் 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை பேசியதாக தெரிவித்தார்.  தமிழகத்தை ஆளுநர் மிகவும்  நேசித்து கொண்டுள்ளார். தமிழக மக்களுடைய நேர்மை கழக உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அரசியல் தொடர்பாக பேசுனீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் என தெரிவித்த ரஜினி அதி தொடர்பாக வெளியில் கூற இயலாது என தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், ரஜினி- தமிழக ஆளுநர் சந்திப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

Tap to resize

Latest Videos

அரசியல் அலுவலகமா? ஆளுநர் மாளிகை

இந்தநிலையில் ரஜினி- ஆளுநர் சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா?தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

ஆளுநரா? நியமன எம்பியா? ஆர்.என்.ரவியோடு ரஜினிகாந்த் சந்தித்ததில் பின்னனி என்ன..?

சிபிஎம் கண்டனம் 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?! என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

இரட்டை இலையை முடக்கி! ரஜினியை முன்னிறுத்தி பாஜக தலைமையிலான கூட்டணி.. பகீர் கிளப்பும் முன்னாள் எம்.பி..!

click me!