உருட்டுவது பூனைகுணம்! கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம்! OPS-TTV சந்திப்பு! ஜெயக்குமார் விளாசல்.!

Published : May 09, 2023, 08:55 AM ISTUpdated : May 09, 2023, 09:01 AM IST
உருட்டுவது பூனைகுணம்! கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம்! OPS-TTV சந்திப்பு! ஜெயக்குமார் விளாசல்.!

சுருக்கம்

சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்பதாக கூறியிருக்கிறார். அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி. தினகரன் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த எந்த நேரத்திலும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தன. இதனை பல பேட்டியில் ஓபிஎஸூம் கூறிவந்தார். 

இதையும் படிங்க;- ஒரே மேடையில் ஓபிஎஸ்-சசிகலா- டிடிவி தினகரன்..! தென் மாவட்டங்களை குறிவைத்து திட்டம்.? அதிர்ச்சியில் எடப்பாடி அணி

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திடீரென அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு சென்றனர். தனது வீட்டுக்கு வந்த ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசல் வரை சென்று வரவேற்ற டிடிவி. தினகரன் இருவருக்கும் பொன்னாடை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்காக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஓபிஎஸ் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பு உண்டு. எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. திமுக எதிரி. ஓபிஎஸ்-ஐ நம்பி அவர் கைப்பிடித்து இருட்டில் கூட செல்ல முடியும். இபிஎஸ்-ஐ நம்பி செல்ல முடியுமா? சிபிஎம் (மார்க்சிஸ்ட்), சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட்) போல் இரு கட்சிகளும் செயல்படும் என டிடிவி.தினகரன் கூறினார். 

இதையும் படிங்க;-  அதிமுக- பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.. இபிஎஸ் மட்டும் தான் அப்படி சொல்றாரு.. பண்ருட்டி ராமச்சந்திரன்.!

அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டியளிக்கையில்;- சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்பதாக கூறியிருக்கிறார். அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சி தான் இந்த சந்திப்பு என்றார். இந்நிலையில், டிடிவி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 

 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இதை பார்க்கும்போது தலைவரின் பாடலே நினைவில் வருகிறது. அன்றே கூறினார் புரட்சிதலைவர்! உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைகுணம்! காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையே கெடுப்பதுவும் குரங்குகுணம்! ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாற்றல் முதலைகுணம்! ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா! என்று பதிவிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?