அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வானகரம் சென்றிருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை பரபரப்பாக நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பும் தனித்தனியாக பிரிந்துள்ளது. இந்தநிலையில் பொதுக்குழு கூட்டம் இன்றும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது. இந்தநிலையில் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் வானகரத்தில் உள்ள பொதுக்கழு நடைபெறும் அரங்கிற்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்சென்றார். அப்போது இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது கல் மற்றும் கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு தரப்பினரும் பலத்த காயம் அடைந்தனர். ரத்தம் சொட்ட சொட்ட தொண்டர்கள் காணப்பட்டனர். இதனையடுத்து கடும் போராட்டத்திற்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற ஓபிஎஸ் சென்றார். அங்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து எப்போதும் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து கை அசைக்கும் பால்கனிக்கு சென்ற ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடம் அதிமுக கொடியை அசைத்து தனது மகிழ்ச்சி தெரிவித்தார்.