அதிமுக அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸ்..! கற்களை வீசி தாக்கிய இபிஎஸ் ஆதரவாளர்கள்- போர்க்களமான சாலைகள்

Published : Jul 11, 2022, 08:39 AM ISTUpdated : Jul 11, 2022, 09:41 AM IST
அதிமுக அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸ்..! கற்களை வீசி தாக்கிய இபிஎஸ் ஆதரவாளர்கள்- போர்க்களமான சாலைகள்

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சென்ற ஓபிஎஸ் வாகனம் மீது கற்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் இதற்க்கு முன்னதாக காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக தான் வரும் என இபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது. இந்தநிலையில் அதிமுக அலுவலகம் சென்ற ஓபிஎஸ் வாகனம் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட காரணத்தால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த இபிஎஸ் பேனர்கள் கிளித்து எரியப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!