பொதுக்குழுவுக்கு புறப்பட்ட அதிமுகவினர் வேன் மீது கண்டெய்னர் லாரி மோதல்.. 2 பேர் பலி.. 13 பேர் காயம்.!

Published : Jul 11, 2022, 08:32 AM ISTUpdated : Jul 11, 2022, 11:09 AM IST
பொதுக்குழுவுக்கு புறப்பட்ட அதிமுகவினர் வேன் மீது  கண்டெய்னர் லாரி மோதல்.. 2 பேர் பலி.. 13 பேர் காயம்.!

சுருக்கம்

மதுராந்தகம் அருகே அதிமுக பொதுக்குழுவுக்கு சென்ற வேன் மீது கண்டெய்னர் லாரி மோதியது.  இந்த விபத்தில் 2 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். 13க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மதுராந்தகம் அருகே அதிமுக பொதுக்குழுவுக்கு சென்ற வேன் மீது கண்டெய்னர் லாரி மோதியது.  இந்த விபத்தில் 2 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். 13க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு மத்தியில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி அரங்கில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலை 9.15 மணிக்கு  நடைபெற உள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள 2,665 உறுப்பினர்களுக்கு கியூஆர் கோடு அடங்கிய ஆர்.எப்.ஐ.டி முறையிலான நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இயந்திரத்தில் ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளே செல்ல முடியும். 

இதையும் படிங்க;- எப்படி இருந்தாலும் தீர்ப்பு நமக்கு சாதகமாக தான் வரும்.. நம்பிக்கையில் இபிஎஸ்.. என்ன காரணம் தெரியுமா?

இதற்காக 15 ஸ்கேனர்கள் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினராக இல்லாத ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளார். 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அதிமுக பொதுக்குழுவுக்கு சென்றுக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி வேன் மீது மோதியது. விபத்தில் திருவண்ணாமலையில் இருந்து பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை வந்த 2 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்துள்ளனர். மேலும், கண்டெய்னர் லாரி மாற்று சாலையில் புகுந்து ஆம்னி பேருந்து, வேன் மீது மோதியதில் 16 பேர் காமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!