
இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்
அதிமுக பொதுக்குழு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் இதற்க்கு முன்னதாக காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக தான் வரும் என இபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது. எனவே ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதியானது பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்குமே தவிர பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!
ஓபிஎஸ் நீக்கம்
மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்க்காக ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு கூட்டம் செல்லாது என கூறி வருகிறது. எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓபிஎஸ் புறக்கணித்துள்ளார். இந்தநிலையில் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு வராத காரணத்தால் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு புதிய பொருளாளாராக ஒருவரை பொதுக்குழுவில் நியமிக்க வாய்ப்பு இருப்பாதக கூறப்படுகிறது. மேலும் புதிதாக நியமிக்கபடும் பொருளாளர் இந்த ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
புதிய பொருளாளர் யார்?
மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றதில் இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ்க்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. குறிப்பாக அதிமக தொண்டர்களின் நம்பிக்கையை ஓபிஎஸ் இழந்து விட்டார் என்றும், கட்சியின் செயல்பாடுகளில் ஓபிஎஸ் தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளது. எனவே பொருளாளர் பதவி மட்டுமில்லாமல் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தற்காலிகமாக நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான முடிவு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
எப்படி இருந்தாலும் தீர்ப்பு நமக்கு சாதகமாக தான் வரும்.. நம்பிக்கையில் இபிஎஸ்.. என்ன காரணம் தெரியுமா?