வசமாக சிக்க போகும் ஓ.பி.எஸ்; சொத்து குவிப்பு வழக்கை CBI-க்கு மாற்றலாமா?!: ஐகோர்ட் அதிரடி

 
Published : Jul 17, 2018, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
வசமாக சிக்க போகும் ஓ.பி.எஸ்; சொத்து குவிப்பு வழக்கை CBI-க்கு மாற்றலாமா?!: ஐகோர்ட் அதிரடி

சுருக்கம்

Ops to get trapped Can property exchange case to CBI chennai high court

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை CBI விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஓ.பி.எஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? என மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த புகாரை விசாரிக்க 3 மாதமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் நீதிமன்றம் வினவியுள்ளது.

முன்னதாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.
 ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர். 2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016-ல் 78 லட்சரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதுதொடர்பாக மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை ஏன் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றக்கூடாது. வழக்கு தொடர்பாக, விவரங்கள் இருந்தால் சிபிஐயிடம் தெரிவியுங்கள் என கூறி, வழக்கை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!