சசிகலாவுடன் ஓபிஎஸ் அணியின் முதல் சந்திப்பு... அதிர்ச்சியில் இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Sep 9, 2022, 1:06 PM IST

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்  வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்

ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றினைய வேண்டும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக விரைவில் ச்சிகலாவை சந்திக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறியவர், ஓபிஎஸ்சை தொண்டர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

சசிகலாவை சந்தித்த வைத்தியலிங்கம்

இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான வைத்தியலிங்கம் சசிகலாவுடன் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு இன்று காலை சென்றுள்ளார். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு தஞ்சாவூர் நோக்கி சசிகலா சென்று கொண்டிருந்த போது வைத்தியலிங்கத்தை சந்தித்து பேசியுள்ளார். இன்று வைத்தியலிங்கத்திற்கு பிறந்தநாளையொட்டி சசிகலாவிற்கு இனிப்பு கொடுத்து வாழ்த்து பெற்றார்.  திடீரென நடைபெற்ற இந்த சந்திப்பு அதிமுக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

இந்தியா ஒற்றுமை 3 ஆம் நாள் பயணம்.. ராகுலை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப்... என்ன பேசினார்கள் தெரியுமா..?

click me!