தொடரும் பின்னடைவு.. அதிமுக அலுவலகத்துக்கு செல்ல ஓபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு..!

Published : Sep 09, 2022, 12:49 PM IST
தொடரும் பின்னடைவு.. அதிமுக அலுவலகத்துக்கு செல்ல ஓபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு..!

சுருக்கம்

அதிமுகவின் அலுவலகத்திற்குச் செல்ல பாதுகாப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜேசிபி பிரபாகரன் நேற்று மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கட்சி தலைமை அலுவலகம் செல்ல இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டது. 

அதிமுக தலைமை அலுவலகம் செல்லவதற்கு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வரவேண்டும். நீதிமன்றம் அனுமதித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருக்கிறோம் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் அலுவலகத்திற்குச் செல்ல பாதுகாப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜேசிபி பிரபாகரன் நேற்று மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கட்சி தலைமை அலுவலகம் செல்ல இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டது. 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் கூறுகையில்;- அதிமுக அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பினர் மீண்டும் அங்கு செல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய சூழலில் நீங்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சீலை உடனடியாக அகற்றி அலுவலக சாவியை எடப்பாடிபழனி சாமி தரப்பினரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமே இருந்து வருகிறது.

இதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதையே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக அலுவலகத்துக்குள் நீங்கள் செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி