அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தவ்தாக்கரே தன் கட்சி விதிகளை திருத்தியதை குற்றம் என கடிந்து கொண்டு தண்டித்த நீதிமன்றங்கள். எடப்பாடிக்கு மட்டும் கேட்டதை கேட்ட நேரத்தில் தீர்ப்பாக தருகிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், துடைப்பம் கொண்டு தொண்டர்கள் எடப்பாடியை வீதிக்கு வீதி விரட்டி அடிக்கிற தொடர்கதையின் தொடக்க நிகழ்வாக முக்கொம்பு கரையின் முப்பெரும் விழா மாநாடு அமையும் என மருது அழகுராஜ் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- இது தற்காலிக முடிவு தான்.. தேர்தல் ஆணையம் என்ன சொல்லி இருக்கு கவனிச்சீங்களா.. பாயிண்டை பிடித்த பண்ருட்டியார்.!
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- பறிக்கப்பட்ட தொண்டனின் உரிமைக்கு பதில் சொல்லாத நீதிமன்றங்கள். தொண்டர்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்த கட்சியின் தலைவரையே விளக்கம் கேட்காமல் நீக்கிய அநீதிக்கு.. விடை சொல்லாது கடந்து போகும் நீதிமன்றங்கள்.. கட்சியின் சட்ட விதிகளை ஒரு நபர் விருப்பத்துக்காக திருத்திய குற்றத்தை கண்டும் காணாமல் புலன் பொத்திக் கொள்ளும் போக்கற்ற பீடங்கள்.
உத்தவ்தாக்கரே தன் கட்சி விதிகளை திருத்தியதை குற்றம் என கடிந்து கொண்டு தண்டித்த நீதிமன்றங்கள். எடப்பாடிக்கு மட்டும் கேட்டதை கேட்ட நேரத்தில் தீர்ப்பாக தருகிறது. வாரம் ஒரு தீர்ப்பு என எடப்பாடிக்கு அவர் விருப்பங்கள் மட்டுமே வரமாக கிடைக்கிறது. ஆனால் அதே எடப்பாடி மீதான கொலை கொள்ளை லஞ்ச ஊழல் வழக்குகள் மட்டும் அசைவற்ற நிலையில் கோமாவில் குறட்டை விட்டு தூங்குகிறது என்றால்.. இவை அனைத்துக்கும் நீதி கேட்கும் எரிமலைத் திடலாக திருச்சி பொன்மலைத் திடல் ஏப்ரல் 24 ல் காட்சி அளிக்கும்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா? 24-ம் தேதிக்குப் பிறகு இபிஎஸ் தரப்பு தெறிச்சு ஓடப்போறாங்க! அலறவிடும் வைத்திலிங்கம்.!
இனி ஓட்டையும் எடப்பாடி நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெற்றுக் கொள் என்று துடைப்பம் கொண்டு தொண்டர்கள் எடப்பாடியை வீதிக்கு வீதி விரட்டி அடிக்கிற தொடர்கதையின் தொடக்க நிகழ்வாக முக்கொம்பு கரையின் முப்பெரும் விழா மாநாடு அமையும் என்பது சத்தியம். திரள்வோம் திருச்சியில் ஊனமுற்ற தீர்ப்புகளை திருத்தி எழுதிட பொன்னி நதிக்கரையில் எழுவோம் எதிரிகளின் மிரட்சியில்.. அனைவரும் வருக.. என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.