இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது திமுக தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது திமுக தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தேர்தல் நடக்க இருப்பதால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யும் இயக்கமல்ல திமுக. வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம். குறிப்பாக இசுலாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம்.
இதையும் படிங்க: காவல்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளையும் களையெடுக்கனும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
கண்ணியமிக்க காயிதே மில்லத்தின் காலத்தில் இருந்து, திமுக எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. நம்முடைய தமிழ்நாடு என்பது திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட மண். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது திமுக தான்.
இதையும் படிங்க: அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்... தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தகவல்!!
அதனால் தான் சங்கிகள் கூட்டமெல்லாம் நம்முடைய தலைவரை பார்த்து பயப்படுகின்றனர். அதனால் கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தனாவர் என்ற பாராட்டை நம்முடைய முதல்வர் பெற்றுள்ளார். ஒரே நாடு ஒரே மொழி உள்ளிட்ட ஒற்றை அடையாளத்திற்குள் நம்மையெல்லாம் அடைக்க நினைக்கும் பாசிச சக்திகளை வரும் 2024 தேர்தலில் அடியோடு விரட்டி அடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.