போதைப் பொருட்கள் மிகுந்த மாநிலமாக தமிழ்நாட்டை விட்டு சென்றதாக கடந்த அதிமுக ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப் பொருட்கள் மிகுந்த மாநிலமாக தமிழ்நாட்டை விட்டு சென்றதாக கடந்த அதிமுக ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு இரவு பகல் பாராமல் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து சேலத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை
கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர், டிஜிபி, கமிஷனர், போலீஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள் மீதெல்லாம் சிபிஐ வழக்கு பதிவு செய்யப்படும் அளவிற்கு குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்தவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசே அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் போதைப் பொருட்கள் மிகுந்த மாநிலமாக தமிழ்நாட்டை விட்டு சென்றனர்.
இதையும் படிங்க: என்ன ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி சம்பாதித்தார்களா? அண்ணாமலையின் டிவிட்டர் பதிவால் பரபரப்பு!!
காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வுக்கு செல்லும் போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரிலேயே இவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையிலும் சில கருப்பு ஆடுகள் இருப்பதினால் அதையும் தற்போது களை எடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்து இளைஞர் எதிர்காலத்தை காப்போம். ஏனென்றால் இது திராவிட மாடல் அரசு என்று தெரிவித்துள்ளார்.