தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் ஓபிஎஸ் செயல்படுகிறார்... ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published Apr 25, 2023, 6:03 PM IST

உண்மையான அதிமுக மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 


உண்மையான அதிமுக மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று திருச்சியில் ஓபிஎஸ் நடத்தியது அதிமுக மாநாடு அல்ல. திமுக அரசு ஸ்டாலினின் பினாமி மாநாடுதான் அது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.

இதையும் படிங்க: நிப்பானியை பிடிக்கப்போவது யார்? காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி!

Tap to resize

Latest Videos

30 ஆயிரம் கோடி ஊழல் என நிதியமைச்சரே கூறியுள்ளது குறித்து தமிழகத்தில் பல பரபரப்பான சூழல் உள்ளபோது, சிறிய குறை கூட ஆளும் திமுக அரசு பற்றி கூறாமல், அதிமுவை பற்றியே தொடக்கத்திலிருந்து முடியும் வரை ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு தமிழக போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருந்து தெரியவேண்டாமா, அது திமுக அரசின் பினாமி மாநாடு என்று.

இதையும் படிங்க: திமுகவுக்கும் பாஜகவுக்கும் இதுதான் வித்தியாசம்! மற்றொரு பிடிஆர் ஆடியோ வெளியிட்டு அண்ணாமலை ட்வீட்

உண்மையான அதிமுக கட்சி கொடி, சின்னம், பொதுச்செயலாளர் என அனைத்துக்கும் சொந்தக்காரர் என எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதை மதிக்காமல், மீறி ஓபிஎஸ் செயல்படுகிறார். உண்மையான அதிமுக மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ளது. அதுதான் உண்மையான அதிமுக மாநாடு. ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவருக்கு காலம் தக்க பதில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

click me!