பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவை நீக்கி தனக்குத்தானே பட்டம் சூட்டிய துரோகி.! இபிஎஸ்ஐ விளாசும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Apr 25, 2023, 3:31 PM IST

அதிமுகவை சதிகாரக் கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் வகையில்  திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் என்னுடைய அறைகூவலை ஏற்று,  அலைகடலென திரண்டு வந்து கலந்து கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்து கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


  திருச்சியில் முப்பெரும் விழா

திருச்சியில் முப்பெரும் விழா ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக நடைபெற்றது. இந்த விழாவினை வெற்றியடைச்செய்தற்காக தொண்ட்ர்களுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்வதற்காக துவங்கப்பட்டது என்பதையும், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் பாதுகாப்போடு வளர்க்கப்பட்டது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தொண்டு என்பது சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது, தொழில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள,

Tap to resize

Latest Videos

ஸ்டாலினை காப்பாற்ற திமுக கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்? தமிழக அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா? வானதி கேள்வி

மகுடத்தைச் சூட்டிக் கொண்ட துரோகி.

நன்னலத்திற்காகச் செய்வது. தொழில் தொண்டாகலாம். ஆனால் தொண்டு தொழிலாகக்கூடாது. தொண்டைத் தொழிலாக்குவது துரோகத்திலும் துரோகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தொண்டு இயக்கத்தினை ஓர் ஆணவக் கும்பல், ஒரு சர்வாதிகாரக் கூட்டம் தொழிலாக்கிவிட்டது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அந்த பதவிக்கு வருபவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் வகுக்கப்பட்ட விதியை குழிநோண்டி புதைந்து, புரட்சித் தலைவி அம்மா அவர்களை நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒரு மாபாதகச் செயலை செய்து, தனக்குத் தானே மகுடத்தைச் சூட்டிக் கொண்டார் துரோகி.

தொண்டர்களுக்கு நன்றி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் துரோகத்தை செய்த சர்வாதிகாரியை கண்டித்தும், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் வகுக்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் காப்பாற்றப்பட்ட விதியை மீளக் கொண்டு வரவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சதிகாரக் கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் வண்ணமும் 24-4-2023 அன்று திருச்சியில் முப்பெரும் விழா நடைபெற்றது. என்னுடைய அறைகூவலை ஏற்று, முப்பெரும் விழாவில் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

எதிலும் நிலையான முடிவு எடுக்க முடியாத நிர்வாக திறனற்ற விடியா அரசு! ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்.!

click me!