ஆவின் பச்சை நிற பால்பாக்கெட் மறைமுகமாக ரூ.2 உயர்வா.? ஏழை மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு- ஓ.பன்னீர் செல்வம்

By Ajmal Khan  |  First Published Feb 9, 2023, 1:39 PM IST

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விதமாக ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் கூறியிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
 


ஆவின் பால் விலை உயர்வா.?

ஆவின் பால் விலையை மறைமுகமாக திமுக அரசு உயர்த்தியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்யும் விதமாக, பல்வேறு ஆவின் பொருட்களின் விலையையும், ஆரஞ்சு நிற பாலின் விலையையும் உயர்த்திக் கொண்டே வந்த தி.மு.க. அரசு,  தற்போது ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஆவின் பாலில் கொழுப்பு சத்து குறைப்பு

தற்போது ஆவின் பால் விலையையும் அந்தந்த ஒன்றியங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை தி.மு.க. அரசு வழங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் பாலினுடைய உற்பத்தி விலையை குறைக்கும் வகையிலும், ஆவின் மொத்த விற்பனையாளருக்கான திருத்தப்பட்ட தரகினை ஈடுசெய்யும் வகையிலும், பச்சை வண்ண உறை கொண்ட பாலின் கொழுப்புச் சத்தினை 4.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக குறைத்துள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரு லிட்டர் பால் விலை 40 பைசா உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும், 

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை.! 3 நாளில் 2 பேர் பலி.! ஆளுனர் ரவி தான் பொறுப்பு- ராமதாஸ் அதிரடி

இரண்டு ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு

இதனை சில்லறை விற்பளையாளர்களுக்கு விற்பனை செய்யும்போது மொத்த விற்பனையாளர்கள் லிட்டருக்கு மொத்தமாக ஒரு ரூபாய் உயர்த்துவார்கள் என்றும், சில்லறை விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு மேலும் ஒரு ரூபாய் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வார்கள் என்றும், மொத்தத்தில் ஒரு லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு பொதுமக்கள் கூடுதலாக இரண்டு ரூபாய் செலுத்த நேரிடும் என்றும், ஏற்கெனவே பால் கவரில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலை என்பது சில்லறை விற்பனையாளர்களால் பின்பற்றப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளள. 

ஓய்வு பெறுகிறார் இறையன்பு.! தலைமைசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் மூத்த அதிகாரிகள்.! முன்னனியில் யார் தெரியுமா?

தற்போதைய விலை மாற்றம் என்பது விதிமீறல்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆவின் பாலினை வாங்கும் நிலை ஏற்படுவதோடு, தனியார் பாலினை பொதுமக்கள் நாடக்கூடிய நிலையும் உருவாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விலையேற்றம் ஒருபுறம் என்றால், மறுபுறம் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. ஆவின் பொருட்களான வெண்ணெய், நெய் போன்றவற்றின் உற்பத்தி குறைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மொத்தமாக வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆவின் பாலகங்களில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. 

விலை உயர்வை ரத்து செய்திடுக

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழையெளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும். அடுத்ததாக, நீல நிற பாக்கெட் பாலிலும் தி.மு.க. அரசு தன் கயரூபத்தைக் காட்டிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். எனவே நிதிநிலையைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்யவும், ஆவின் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பசுக்கு மட்டும் தான் அரவணைப்பு தினமா.? காளைகளுக்கு இல்லையா.? -ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் திடீர் கோரிக்கை

click me!