தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் ..! ஸ்டாலின் தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு

Published : Oct 18, 2022, 03:34 PM ISTUpdated : Oct 18, 2022, 05:35 PM IST
தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் ..! ஸ்டாலின் தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு

சுருக்கம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 8 வது பிரிவில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் எனவும் அன்னை தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி திணிப்பு

அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரான அமித்ஷா குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக சார்பில் பேசிய  ஓ.பன்னீர்செல்வம், இந்திக்கு எதிரான போராட்டம் 1930 ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னையில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் போது கைது செய்ய பட்ட நடராஜன் உயிரிழந்தார். 

மொழி போராட்டத்தின் முதல் களபலி நடராஜன் , இதனை தொடர்ந்து தாள முத்து உயிரிழந்தார்.  1940 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை அரசு திரும்ப பெற்றது. மேலும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என பிரதமர் நேரு தெரிவித்ததை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் லேசாக ஓய்ந்தது.  இதனையடுத்து 1960 களில் தமிழ்நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்தது. 

ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஸ்டாலின் அரசு..! உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் தீர்மானம்

போலீஸ் துப்பாக்கி சூடு அதிகரிக்க உயிர் பலிகளும் அதிகரித்தது. வேறு வழியின்றி ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என அப்போதைய ஆட்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழ் மொழி வளர்சிக்கு கொண்டுவந்த திட்டங்களை சொன்னால் அந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 8 வது பிரிவில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் எனவும் அன்னை தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என கூறிய ஓ பன்னீர் செல்வம்,  முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவலக மொழியாகத் தொடர்ந்திட அரசியலமைப்புச் சட்டம் இரண்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து பல்வேறு சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் பேசினர். பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்

தூத்துக்குடி போராட்டக்காரர்களை வேட்டையாடிய காவலர் சுடலைக்கண்ணு..! 17 ரவுண்ட் சுட்டது ஏன்.? அறிக்கையில் தகவல்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!