ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கைகள் மீது விவாதம் நடத்தியிருக்க வேண்டும் ஆனால் அது நடந்தால் அதிமக ஆட்சியில் நடந்த அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என பயந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அவையில் இருந்த வெளியேறி இருக்கின்றனர் என அவை முன்னவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கைகள் மீது விவாதம் நடத்தியிருக்க வேண்டும் ஆனால் அது நடந்தால் அதிமக ஆட்சியில் நடந்த அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என பயந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அவையில் இருந்த வெளியேறி இருக்கின்றனர் என அவை முன்னவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம், ஹிந்தி இணைப்புக்கு எதிராக தீர்மானம் என முக்கியமான தருணத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று இரண்டாவது நானாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமியின் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடிபழனிசாமி தரப்பினர். அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அறிவிக்கவேண்டும் என கூறிய அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஸ்டாலின் அரசு..! உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி
undefined
அப்போது அதிமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்திய சபாநாயகர் அப்பாவு, அது குறித்து பேசுவதற்கு பிறகு நேரம் ஒதுக்குகிறேன், ஓபிஎஸ் இருக்கை குறித்தும் நான் பிறகு பதிலளிக்கிறேன், ஆனால் கேள்வி நேரம் முடியட்டும், கேள்வி நேரத்தின் போது இதுபோன்ற இடையூறு செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினார். ஆனால் இபிஎஸ் தரப்பினர் அதை பொருட்படுத்தவில்லை, தொடர்ந்து சட்டப்பேரவைக்கு முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த பேரவை தலைவர் சபாநாயகர் சட்டமன்றத்திற்குள் கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அதிமுக உறுப்பினர்கள் வந்து இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இதையும் படியுங்கள்: ஜெயலலிதா மரணம்..! சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்துள்ளனர்.! சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் குழப்பம் விளைவித்த எடப்பாடி பழனிச்சாமி அதரவு எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே அவை காவலர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்களை அவையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது அதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து நீதி வேண்டும் நீதி வேண்டும் எனவும் என்றும், செய்யாதே செய்யாத ஜனநாயக படுகொலை செய்யாதே எனவும் எடப்பாடி தரப்பினர் முழக்கமிட்டவாறு வெளியேறினர். அதன் பின்னர், இதுகுறித்து அவை முன்னவர் துரைமுருகன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கைகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் வெளியேறியுள்ளனர், ஜெயலிதாவுக்கு செய்த அட்டூழியங்கள் வெளியே வந்துவிடும் என்பதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று தாக்கல் ஆகின்றன.
இந்த இரண்டு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும் நிலையில் அவர்கள் இந்த கலகத்தில் ஈடுபடுகின்றனர். அவைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சட்டசபைக்கு வந்துள்ளனர். சட்டப்பேரவையில் விரும்பத் தகாத நிகழ்வைஅதிமுக செய்துள்ளது என துரைமுருகன் கூறினார்.