ஜெ. இறந்த தேதியில் கோல்மால்.. அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்.. தவறுக்கு மேல் தவறு செய்த சின்னம்மா.?

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2022, 12:25 PM IST
Highlights

ஜெயலிதா டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கே இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 4-ஆம் தேதியே மரணம் அடைந்துவிட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. அது தொடர்பாக இரண்டு பேர் கொடுத்த சாட்சியங்களையும் தனது அறிக்கையில் ஆதாரமாக இணைத்துள்ளது. ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு உயிரிழந்ததாக அறிவித்துள்ள நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக சிகிச்சை விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு  அவர் உயிரிழந்ததாக அப்பல்லே மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

இதையும் படியுங்கள்: ஜெ.மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கைக்கு பயந்து ஓடுகிறார் இபிஎஸ்.. அசிங்கபடுத்திய துரைமுருகன்

ஆனால், ஜெயலலிதா  சிகிச்சை பெற்றுவந்தபோது ஆவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்,  ஆனால் ஏதோ காரணத்திற்காக மறைக்கிறார்கள் என பொதுமக்கள் பரவலாக பேசி வந்தனர். இது போன்ற பல சந்தேகங்கள் எழுந்த நிலையில்தான் ஆறுமுகசாமி ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இதற்கான விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறுவிதமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:  ஹிந்தி திணிப்பு.. போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு..

ஜெவுக்கு சிகிச்சை வழங்கிய பல அயல் நாட்டு மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்க வேண்டுமென அறிவுரை வழங்கியும் அது செய்யப்படவில்லை,  ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு கொண்டுசென்று சிகிச்சை வழங்க மருத்துவர்கள் அறிவுரை கூறினார், ஆனால் அதுவும் செய்யப்படவில்லை, இது அனைத்திற்குமே சசிகலா தடையாக இருந்தார் என அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அவர்கள் டிசம்பர் 4ஆம் தேதி உயிரிழந்து விட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு  அவர் உயிரிழந்ததாக மாற்றி அறிவிக்கப் பட்டுள்ளது என்றும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்த, அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா அவர்கள் உயர்ந்ததாக மறுநாள் அதாவது டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 க்குதான் உயிரிழந்ததாக அறிவித்துள்ள நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்காம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு பிறகு ஜெயலிதாவுக்கு இதய துடிப்பு இல்லை,   எக்மோ சிகிச்சை நிபுணர் சாட்சியத்தின் படி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  
 

click me!