இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.! இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்- இபிஎஸ் அணியை அதிர்ச்சியாக்கும் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jan 24, 2023, 8:11 AM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ஆக இப்போது இருப்பது அதிமுகவில் ஒரே பதவி தான் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பதவி மட்டுமே உள்ளது உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 

ஈரோடு தேர்தல் போட்டி உறுதி- ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்  மாவட்ட செயலாளர்களின் விருப்பமாக கழக நிர்வாகிகளின் விருப்பமாக அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஒருமித்த கருத்து தான் இன்றைக்கு முக்கிய கருத்தாக பேசப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி கூடிய விரைவில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு முடிந்தவுடன் வேட்பாளர் அறிவிப்பு வரும் என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு தேர்தல்: 3 அமைச்சர்கள்.. தண்ணி போல பணம் இறங்கும்! இதுதான் திமுக பிளான்! அண்ணாமலை அட்டாக்

இபிஎஸ் ராஜினாமா செய்து விட்டார்

மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் அதனால் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதிமுகவை பொருத்தவரை ஜனநாயக முறையில் கழக சட்ட விதிப்படி நடத்தப்பட்ட கழக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை உறங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒன்றரை கோடி தொண்டர்களால் கழக சட்ட விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம் அதை தான் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமான பதவியாக நிலை கொண்டு உள்ளது இருவரும் சேர்ந்து கையொப்பமிட்டால்தான் அங்கு இரட்டை இலை கிடைக்க வேண்டிய சூழல் உள்ளது இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாமாகவே கழக சட்ட விதிக்கு புறம்பாக சட்ட விரோதமாக கூட்டப்பட்ட அந்த பொது குழுவில் இடைக்கால பொது செயலாளர் என்று அறிவித்தார் கழக சட்ட வீதியில் அது இல்லை.

இரட்டை இலை எங்களுக்கு தான்- ஓபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ஆக இப்போது இருப்பது அதிமுகவில் இருப்பது ஒரே பதவி தான் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பதவி மட்டுமே உள்ளது உறுதியாக இரட்டை இலை சின்னம் ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய எங்களுக்கு தான் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தனி வழி என்ற கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது எடப்பாடி பழனிச்சாமி என்றைக்குமே ஊர் வந்து சேர மாட்டார். எங்களுடைய பண்பாடு நாங்கள் அனைவரும் ஒன்று இணைந்து கூட்டணி கட்சிகளை சந்திக்கிறோம் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் களமிறங்கும் டிடிவி. தினகரன்? இரட்டை இலை நிச்சயம் முடங்கும்? அவரே சொன்ன பரபரப்பு பேட்டி.!

click me!