வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! தைரியம் இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிடுங்க.. எம்.பி. மாணிக்கம் தாகூர்.!

By vinoth kumar  |  First Published Jan 24, 2023, 6:44 AM IST

தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றுவது வழக்கம். அது திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. 


ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து இருப்பது நல்ல முடிவு என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றுவது வழக்கம். அது திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தமட்டில் வெறும் வாயில் வடை சுடுகிறவர். அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ, தனித்தோ போட்டியிட்டும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக தான்.. அண்ணாமலை சொல்ல வருவது என்ன? பரபரப்பு பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து இருப்பது நல்ல முடிவு. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பது மத்திய அரசின் கடைசி பட்ஜெட் ஆக இருக்கும் என்றார். வரும் பட்ஜெட்டிலாவது ஏமாற்றம் செய்யாமல் விருதுநகர் மாவட்ட  திட்டங்களுக்கான உரிய நிதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கொடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க;-  தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்! ஆதரவுக்காக இப்படி தேடி ஓடுகிறார்களே? வேதனையில் பூங்குன்றன்..!

மேலும், ராகுல் காந்தி நடைபயணத்தை எதிர்மறையாக பேசியவர்கள் கேலி செய்தவர்கள், தற்போது நடைபயணம் செய்யத் தொடங்கி இருப்பது, அதிலும் பாஜகவினர் நடைப்பயணம் செய்யத் தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

click me!