அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக "தங்க தமிழ் மகன்" விருது வழங்கப்பட்டது.
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அரசு முறை பயணமாக சென்றிருக்கும் அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
undefined
நேற்று அமெரிக்கா தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில்சிகாகோ ஓக் புரூக் டெரேஸில், 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக துணைமுதல்வர் பன்னீர் செல்வத்திற்கு 'தங்க தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து 12-ந்தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் மாநில கவர்னர் ஆகியோரை துணை முதல்வர் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தொழில் முனைவோர் சார்பில் நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு தமிழகம் திரும்புகிறார்.
இதையும் படிங்க: மறைந்த அதிமுக பிரமுகருக்கு திமுக பொதுக்குழுவில் அஞ்சலி..! ஸ்டாலின் அதிரடி..!