மனம் தாளாமல் குமுறி வெடித்த புலிப்படை..!! நீதி பரிபாலனத்திற்கு எதிராக, துணிந்து எழுந்த கருணாஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2019, 11:57 AM IST
Highlights

சாட்சிகள், வரலாற்று தரவுகள் ஆகியவைகளை முன்வைத்து சொல்லாமல் ஒருசார்பு மதநம்பிக்கை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது இது சட்டப்படியான சொல்லப்பட்ட தீர்ப்பாக இல்லாமல், இதை முடித்து வைக்க வேண்டும். முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நீதி வழங்கியிருப்பது # நீதியை_ நம்புவோருக்கு ஏமாற்றமளிக்கிறது. 

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  ஒருபக்க சார்பாக வழங்கப் பட்டிருப்பது,  ஏமாற்றமளிக்கிறது. என முக்குலத்தோர்_புலிப்படை தலைவர் எம். எல்.ஏ. கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம்... அயோத்தி வழக்கில், (09.11.2019) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பு,ஏமாற்றமளிக்கிறது.

சர்ச்சைக்குரிய 1,500 சதுர கெஜம் முழுவதும் ராமர் கோவிலுக்கு உரியது என்றும் அதற்கு அருகிலே உள்ள 67 ஏக்கர் திடலில் ஐந்து ஏக்கர் நிலத்தை இந்திய அரசு மசூதிக்காக ஒதுக்கித் தர வேண்டும் அல்லது அயோத்தி நகருக்கு முஸ்லீம்கள் விரும்பும் ஒரு பகுதியில் 5 ஏக்கர் நிலம் மசூதிக்காக உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கித் தர வேண்டும் மூன்று மாதத்திற்குள் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை நடுவண் அரசு நிறுவ வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்குமுன் 2010 இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து, இந்துக்களுக்கு இரண்டு பங்கும், முஸ்லிம்களுக்கு ஒரு பங்கும் கொடுத்து அளித்த தவறனாது என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது வந்துள்ள உச்சநீதி மன்றத்தீர்ப்பு அதைவிட பின் தங்கியதாக உள்ளது. ஏமாற்றமளிக்கிறது 

சாட்சிகள், வரலாற்று தரவுகள் ஆகியவைகளை முன்வைத்து சொல்லாமல் ஒருசார்பு மதநம்பிக்கை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது இது சட்டப்படியான சொல்லப்பட்ட தீர்ப்பாக இல்லாமல், இதை முடித்து வைக்க வேண்டும். முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நீதி வழங்கியிருப்பது # நீதியை_ நம்புவோருக்கு ஏமாற்றமளிக்கிறது. மதசார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டு ஓர் மதம் சார்ந்தே நீதி வழங்கியிருப்பது ஏற்கமுடியாத ஒன்றாகும்.

 1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் சட்டத்தை மீறிய செயல் என்று கண்டிக்கும் இத்தீர்ப்பு அவ்வாறான அத்துமீறல்களை இந்துக்களின் நம்பிக்கை" க்கான அழுத்தமாக எடுத்துக் கொள்கிறது ஆனால் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை.  அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறோம்" என்று சொல்கின்ற இந்தத் தீர்ப்பு, ஐயத்திற்கு இடமின்றி எந்த வரலாற்றுத் தரவையும் அகழ்வாராய்ச்சி தரவையும் சுட்டிக்காட்டமால தீர்ப்பு வழங்கியது ஏன்? அடிப்படைச் சான்றுகள் இன்றி ஒரு தரப்புக்கு முழு சொத்துரிமையும் வழங்கியிருக்கிறது மத நம்பிக்கை அடிப்படையிலும் அரசதிகாரம் மற்றும் பெரும்பான்மை என்ற அளவுகோல் வைத்தும், இத்தீர்ப்பு வழங்கப்பட்டதா என சந்தேகப்படவேண்டியிருக்கிறது. ஆகவே இந்தத்தீர்ப்பு ஒருபக்க சார்பான தீர்ப்பு என்று நோக்குவதில் எல்லளவில் மாற்றமில்லை.
 

click me!