ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை என்னை கட்டுப்படுத்தாது.. தலைமைக்கு எதிராக அதிமுக நிர்வாகி நோட்டீஸ்..!

By vinoth kumarFirst Published Jul 9, 2021, 7:36 PM IST
Highlights

கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்து அதிமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்து அதிமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ரூபன் k.வேலவன் நீக்கப்பட்டார். இந்நிலையில், நீக்கப்பட்ட நிர்வாகி  சார்பில் அவருடைய வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில் அதிமுகவை விட்டு நீக்கிய நடவடிக்கை தம்மை கட்டுப்படுத்தாது. 1988ம் ஆண்டு முதல் அதிமுகவில் சேர்ந்து ஓயாத கட்சி பணிகளில் ஈடுபட்டு வருவதாக  ரூபன் k.வேலவன் குறிப்பிட்டுள்ளார். 

கட்சி பணிகளை அங்கிகரிக்கும் வகையில் 1991ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் அதிமுக மாணவரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகள் விளாத்திக்குளம் ஒன்றிய கழக செயலாளராக  பதவி வகித்திருப்பதாகவும், கூறிய வேலன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த ஜூன் 27ம் தேதி அதிமுக கொள்ளை குறிக்கோள்களுக்கு, கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாக அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்து தம்மை நீக்கி இருப்பதாக வெளியான அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிமுகவில் திருத்தப்பட்ட துணை விதிகளின் படி தம்மிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கி இருப்பது செல்லாது என்றும் பன்னீர்செல்வம், பழனிசாமியின் அறிவிப்பு எந்த வகையில் தன்னை கட்டுப்படுத்தாது என்றும்,  ரூபன் k.வேலவன் குறிப்பிட்டுள்ளார். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவுடன் பேசியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் வேலன். சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடும் அதிமுக நிர்வாகிகளை நீக்கி வரும் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக நிர்வாகி போர்க்கொடி உயர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!