என்ன ஒரு மனிதாபிமானம்.. விபத்தில் சிக்கி கால் முறிந்த இளைஞர்.. கட்சி வேட்டியை கிழித்து கட்டுப்போட்ட Doctor MLA

By vinoth kumarFirst Published Jul 9, 2021, 7:09 PM IST
Highlights

விழுப்புரத்தில் சாலை விபத்தில் சிக்கி கால் முறிந்து வலியால் துடித்த இளைஞருக்கு மருத்துவரான டாக்டரும் திமுக எம்எல்ஏ லட்சுமணன், கட்சி கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப்போட்டு முதலுதவி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

விழுப்புரத்தில் சாலை விபத்தில் சிக்கி கால் முறிந்து வலியால் துடித்த இளைஞருக்கு மருத்துவரான டாக்டரும் திமுக எம்எல்ஏ லட்சுமணன், கட்சி கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப்போட்டு முதலுதவி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், தன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது ராகவன்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவர், விபத்தில் சிக்கி இடது கால் எலும்பு முறிவுடன் சாலையோரத்தில் வலியில் துடித்துக்கொண்டிருந்தார். 

அப்போது, அவ்வழியாக சென்ற விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் இளைஞருக்கு ஆறுதல் கூறிவிட்டு முதலுதவி அளிக்கத் தொடங்கினார்.  காலில் கட்டுப்போடத் துணிகள் அப்போது இல்லாததால், காரில் இருந்த திமுக கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப் போட்டு, சிகிச்சை அளித்தார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து இளைஞரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார். 

click me!