ஓபிஎஸ் அணி சார்பில் இன்று மாநாடு.. அதிமுக அலுவலகம் வடிவில் அமைக்கப்பட்ட மேடை.. டென்ஷனில் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Apr 24, 2023, 6:56 AM IST

நீதிமன்றம், தேர்தல் ஆணையம்  எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது.  இதனால், அரசியல் களத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்-க்கு ஏற்பட்டது.


திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடைபெறும் மாநாட்டு மேடை அதிமுக தலைமை அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றம், தேர்தல் ஆணையம்  எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது.  இதனால், அரசியல் களத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்-க்கு ஏற்பட்டது. நீதிமன்ற படி ஏறி ஏறி கால்கள் அசந்துவிட்டன, இனி மக்கள் மன்றம் தான் எனக்கூறி எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்தநாள், கட்சியின் 51-வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று நடைபெறும் என்று ஓபிஎஸ் அறிவித்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஓபிஎஸ்யை குனிந்து கும்பிடும் இபிஎஸ்.! ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சியில் எடப்பாடி அணி

இதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் தரப்பினர் செய்து வந்தனர். இந்த மாநாடு ஓபிஎஸ்-க்கு திருப்புமுனை மாநாடாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் அடித்து கூறிவருகின்றனர்.  குறிப்பாக மேடை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதில், அதிமுக தலைமை அலுவலகம் வடிவில் மாநாட்டு மேடையை  அமைத்துள்ளனர். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்களுக்கு நடுவே ஓபிஎஸ் படம் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க;- துரோகத்தை துரத்தியடிக்க.! சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட.. அனைவரும் ஒன்றினையனும்- அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஏற்கனவே இபிஎஸ் தரப்பினர் அதிமுக கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் விழா மேடையையே அதிமுக அலுவலகம் போல் அமைத்து எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியுள்ளார். 

click me!