கர்நாடக தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் வரும் மே.10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், புலிகேசி நகர், கோலார், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். அதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அதிமுக பெயரில் ஏற்கப்பட்டிருந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 2 வேட்பாளர்களும் நாளை வாபஸ் பெறுகின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை. பதிவாளரை நீக்க வேண்டும்... அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே காந்தி நகர் தொகுதியில், அதிமுக பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார், வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.