ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக தலைவர்கள் குழு நிதியமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக தலைவர்கள் குழு நிதியமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த ஆடியோ குறித்து அண்ணாமலைஅறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்... ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு!!
undefined
அதில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாகக் கூறப்படும் ஆடியோ உண்மைத்தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி பாஜக தலைவர்கள் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை. பதிவாளரை நீக்க வேண்டும்... அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் குழு இன்று மாலை சந்தித்தது. இந்தச் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leaders of met the Honourable Governor of TN Thiru RN Ravi avl today requesting an enquiry to be ordered in the audio tape of the State Finance Minister mentioning that the DMK 1st family made ₹30,000 crores in a year thru corrupt means. (1/2) pic.twitter.com/bBr2PUccyO
— K.Annamalai (@annamalai_k)ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். தன்னுடைய குரல் இல்லை என்பதை நீதிமன்றம் சென்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிரூபிக்கட்டும். ஆடியோவில் இருப்பது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குரல் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.