“நானும் ரவுடிதான்னு வடிவேல் சொல்றமாதிரி” நான் சிங்கம் சிங்கம்னு சசிகலா சொல்றாங்க – ஓ.பி.எஸ் கிண்டல்  

 
Published : Feb 12, 2017, 10:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“நானும் ரவுடிதான்னு வடிவேல் சொல்றமாதிரி” நான் சிங்கம் சிங்கம்னு சசிகலா சொல்றாங்க – ஓ.பி.எஸ் கிண்டல்  

சுருக்கம்

அதிமுக, சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்த பிறகு மக்களின் மூளையும் இரண்டாக செயல்பட ஆரபித்துவிட்டது.

சசிகலாவும் ஓ.பி.எஸ்சும் போட்டி போட்டுகொண்டு அறிக்கையை விடுகின்றனர்.

அதிமுகவை பிளக்க முடியாது என இருவருமே கூறி வரும் நிலையில் இடைப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மண்டை குழம்பி திரிகின்றனர்.  

கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை சந்தித்த சசிகலா பன்னீர்செல்வத்திற்கு எதிராக பல கருத்துக்களை எழுச்சி உரைகளாக செய்தியாளர்கள் முன் வைத்தார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் நக்கலாகவும், நையாண்டியாகவும், ஆக்ரோஷமாகவும் சசிகலாவுக்கு பல பதிலடிகள்  கொடுத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தொகுதி மக்களின் கருத்தை கேட்க வேண்டும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு தடவை கூட சசிகலா செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

ஆனால் தற்போது ஓடி ஓடி போய் எம்.எல்.ஏக்களை சந்திப்பது ஏன்?

எம்.எல்.ஏக்கள் தங்கள் குறைகளை தன்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 குண்டர்கள் காவல் வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

அதிமுகவை 28 ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே 3 ஆவது பெரும் கட்சியாக வளர்த்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று தான் மக்கள் வாக்களித்தனர்.

அதிமுக நிர்வாகிகள் யாரையும் நான் தூண்டிவிடவில்லை.

நான் வேண்டாம் என்று சொன்னபோதும் தன்னை முதல்வராக்கி விட்டு சசிகலா குடுமபத்தினர் அசிங்கபடுத்தினர்.

அதிமுக ஆட்சிக்கு குந்தகம் வரகூடாது என்பதற்காக அவமானங்களை பொறுத்தேன்.

ஜெயலலிதா பெற்று தந்த ஆட்சியின் பெயரை காக்க பொறுமையாக இருந்தேன்.

ஜெயலலிதா மறைந்தபோது அவரது உறவினர்களை உடலை கூட பார்க்க விடாமல் தடுத்தவர் சசிகலா.

ஜெயலலிதாவை யாரும் சந்திக்க சசிகலா அனுமதிக்க வில்லை.

தமிழக மக்களின் எழுச்சியை உலக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

யாராவது தன்னை பார்த்து சிங்கம் என்று கூறுவார்களா?

சசிகலா பேசியது வடிவேலு பட காமெடி போல் உள்ளது.

யாரையும் நான் அழைக்கவில்லை. தாமாகவே எனக்கு ஆதரவு தருகின்றனர்.

இவ்வாறு கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!