“என் கையை வைத்தே என் கண்ணை குத்த வேண்டாம்” – பன்னீர் மீது சசிகலா கோபம்

 
Published : Feb 12, 2017, 09:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“என் கையை வைத்தே என் கண்ணை குத்த வேண்டாம்” – பன்னீர் மீது சசிகலா கோபம்

சுருக்கம்

நமக்கிடையே குழப்பத்தை உண்டாக்கி ஆட்சியை கலைக்க பார்க்கிறார் பன்னீர் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற சசிகலா ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை செய்தியாளர்களுக்கு அடையாளம் காட்டினார்.

இதையடுத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

சோதனை காலத்தில் ஜெயலலிதாவுடன் தான் உறுதியாக நின்றேன்.

எந்த அளவுக்கு எதிகட்சியினர் அதிமுகவுக்கு எதிராக வலை பின்னுகிறார்கள்.

என்னையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்றத்தில் இருந்து பொறுப்புடன் செயல்பட ஆரமித்து விட்டேன்.

எதிரிகளின் அனைத்து சதிகளையும் முறியடிப்பேன்.

அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என நினைத்து சில எட்டப்பர்கள்  உருவாகி உள்ளனர்.

எம்.எல்.ஏக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிமுக கட்சியின் தொண்டர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு பொதுச்செயலாளர் பதவியை ஏற்றேன்.

அதிமுகவை தொண்டர்கள் அனைவரும் என்னை நம்பி ஒப்படைத்துள்ளனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் விதத்தில் நமது உழைப்பு இருக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க வேண்டும்

அரசாங்கத்தை யாராலும் தடை போட்டு நிறுத்த முடியாது.

பன்னீர்செல்வம் அதிமுகவை இரண்டாக பிளவு படுத்த முயற்சிக்கிறார்.

என் கையை வைத்து என் கண்ணையே குத்த பார்க்கிறார் பன்னீர்.

அதிமுகவையும் ஆட்சியையும் உயிருள்ளவரை காப்பாற்றுவேன்.

ஆட்சி அமைத்து அனைத்து மக்களின் நன்மதிப்பை பெறுவதே அதிமுகவின் நோக்கம்.

எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் நன்றி.

எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதித்துகாட்டுவேன்.

இவ்வாறு உரையாற்றினார்.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு